< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்.!
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்.!

தினத்தந்தி
|
16 April 2023 7:31 PM IST

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை கான முடிகிறது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, ஈரோடு மற்றும் வேலூரில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

திருத்தணியில் 104, திருப்பத்தூர், சேலத்தில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், மற்றும் மதுரையில் 102 டிகிரி, நெல்லை மற்றும் தருமபுரியில் தலா 101 டிகிரி, தஞ்சாவூர், கோவையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

இதனிடையே தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்