< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்

தினத்தந்தி
|
14 April 2023 10:10 PM IST

தமிழகத்தின் 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர தயங்குகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

வேலூர் மற்றும் சேலம் 104, மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும், சென்னை, கோவை, தருமபுரி, திருத்தனி, ஆகிய பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

மேலும் செய்திகள்