< Back
மாநில செய்திகள்
11 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

11 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினத்தந்தி
|
1 Sept 2022 10:55 PM IST

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 11 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சென்னையில் இருந்து கடலூர் வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 603 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், நேற்று 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 96 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 2 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்