< Back
மாநில செய்திகள்
ரெயிலில் கடத்திய 11 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ரெயிலில் கடத்திய 11 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
3 Sept 2022 10:11 PM IST

ரெயிலில் கடத்திய 11 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் காட்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயில்களில் சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ராமன், கண்ணன், முத்துவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளில் சோதனை செய்தபோது அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா போன்ற 11 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெயிலில் பான் மசாலா மற்றும் குட்காவை கடத்தியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்