தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
|திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
*ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.