< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நாய்கள் கடித்துக்குதறியதில் 11 ஆடுகள் சாவு
|16 April 2023 12:43 AM IST
நாய்கள் கடித்துக்குதறியதில் 11 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் ஊராட்சி கண்ணக்குடும்பன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்வேல் (வயது 73). இவர் இப்பகுதியில் தொழுவம் அமைத்து 23 செம்மறி ஆடுகளை வளர்த்தார். அந்த தொழுவத்திற்குள் புகுந்த 3 நாய்கள், ஆடுகளை கடித்துக்குதறின.
இதில் 11 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. 11 ஆடுகள் காயம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து பன்னீர்வேல் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார், விசாரணை நடத்தி நாய்களின் உரிமையாளர்களான 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.