10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு
|10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
சென்னை,
தமிழகத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் மொத்தம் 9,14,320 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகின. அதில் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக துணைத்தேர்வு ஜூன் 27 முதல் - ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. துணைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுக் கல்வி இயக்குநரகம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை dge.tn.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண் அட்டவணையை பதிவிறக்கலாம். தேர்வர்கள் dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களின் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியைக் பதிவிட்டால் போதுமானது. தமிழ்நாடு அரசுக் கல்வி இயக்குநரகம் +2 துணைத்தேர்வு முடிவுகளை கடந்த 24ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.