< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை
|22 Aug 2022 6:18 PM IST
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக துணைத்தேர்வுகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.