< Back
மாநில செய்திகள்
கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம்

தினத்தந்தி
|
28 Aug 2022 2:35 PM IST

கல்பாக்கத்தில் கடல் அலையில் சிக்கிய 10-ம் வகுப்பு மாணவர் மாயம் ஆனார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சோந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் மோகன் (வயது 15), இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது வகுப்பு நண்பர்கள் சிலருடன் மோகன் கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். பிறகு தன்னுடன் வந்த நண்பர்கள் சிலருடன் சென்று கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்திற்கு பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர்.

அப்போது மோகன் ராட்சத அலையில் சிக்கி மூச்சு திணறினார்.

பிறகு ராட்சத அலையால் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்ட அவர் மாயமானார். பிறகு உடன் வந்த அவரது நண்பர்கள் மோகன் கடலில் அடித்து செல்லப்பட்ட விவரத்தை அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கடலோர காவல் படையினர் மற்றும் புதுப்பட்டினம் மீனவர்கள் உதவியுடன் நடுக்கடலில் மோகனை தேடினர்.

மேலும் செய்திகள்