< Back
மாநில செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு

தினத்தந்தி
|
30 Oct 2022 6:08 PM IST

சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

10-ம் வகுப்பு மாணவர்

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நரேஷ் (வயது 14). இவர் மொளச்சூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சக நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு வீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து இருந்தது. நரேஷ் அதை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதில் நரேஷ் உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசபட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நரேசை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் நரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்