< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|26 March 2023 12:10 AM IST
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் பிரித்திஷா (வயது 15). இவர் அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனி அறையில் பிரித்திஷா இருந்துள்ளார்.
பின்னர் அவரது தாய் செந்தாமரை அந்த அறைக்கதவை திறந்து பார்த்தபோது கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பிரித்திஷா பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரித்திஷா உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.