< Back
மாநில செய்திகள்
மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
8 Jun 2022 5:13 PM IST

மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவரது மகன் சதீஷ் (17). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது சதீஷ் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் சதீஷ் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர் அதில் '10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும்' என எழுதியிருந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்