< Back
தமிழக செய்திகள்
10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
சேலம்
தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
28 Oct 2022 4:28 AM IST

கருப்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கருப்பூர்:

10-ம் வகுப்பு மாணவி

கருப்பூர் அருகே வெள்ளாளப்பட்டி புதுகாலனி பகுதி சேர்ந்தவர் தர்மலிங்கம். அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி ஜோதி 108 ஆம்புலன்சில் டெக்னீசியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் சம்யுக்தாஸ்ரீ (வயது 15).

இவர், கருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வயிறு வலிப்பதாக கூறி பள்ளிக்கு செல்லவில்லையாம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை, மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணை

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சம்யுக்தாஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தரெிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதைனக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலைக்கு காரணம் வயிற்று வலி என கூறப்படுகிறது. இருந்தாலும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்