< Back
மாநில செய்திகள்
பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
4 Nov 2022 3:49 PM IST

பள்ளி மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி நிர்வாகம் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மகள் நிஷ்மா (வயது 15). ஊரப்பாக்கம் கங்கை நகர் பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிஷ்மாவிற்கு சமீபத்தில் நடைபெற்ற கணித தேர்வின் மதிப்பெண் வினாத்தாளை ஆசிரியர் வழங்கி உள்ளார். கணித பாடத்தில் மிக குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர், நிஷ்மாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த நிஷ்மா பள்ளி இடைவெளி நேரத்தில் பள்ளியில் உள்ள 3-வது மாடிக்கு ஏறிச்சென்று மொட்டை மாடியில் இருந்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென கீழே குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிஷ்மாவை உடனடியாக பள்ளி நிர்வாகம் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தது.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கணிதம் பாடப்பிரிவு ஆசிரியர் மற்றும் நிஷ்மாவுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரித்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்