< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
|17 Oct 2022 12:20 AM IST
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 10-வகுப்பு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் 24-ந் தேதி வழங்கப்பட்டு மேல் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டு பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் தேர்வு துறையினரால் பள்ளிகளுக்கு கடந்த 13-ந் தேதி வழங்கப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று வழங்கப்பட்டது.