10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: வாலிபருக்கு வலைவீச்சு
|அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
செய்யாறு,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி வந்திருந்தார். அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவியை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் செய்யாறு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது நடந்ததை மாணவி தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து வாலிபர் சின்ராசுவை தேடி வருகிறார்.