10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்
|10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை, 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (29-ந்தேதி) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.