< Back
மாநில செய்திகள்
வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தீர்க்க 10-ந் தேதி முகாம் - சென்னை வடக்கு மண்டல ஆணையர் அறிவிப்பு
சென்னை
மாநில செய்திகள்

வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தீர்க்க 10-ந் தேதி முகாம் - சென்னை வடக்கு மண்டல ஆணையர் அறிவிப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 9:36 AM IST

சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 சி.அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) சென்னை வடக்கு மண்டல அலுவலகம் சார்பில், 'நிதி ஆப்கே நிகத்' என்ற 'உங்கள் அருகே பி.எப்.' நிகழ்ச்சியை வருகிற 10-ந் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பி.எப். தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஓய்வூதியதாரர், இந்த அலுவலகத்தில் பி.எப். கணக்கு வைத்துள்ள தொழிலாளிகள் ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்