< Back
மாநில செய்திகள்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் பி.ஏ.வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி சாதனை
கரூர்
மாநில செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் பி.ஏ.வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி சாதனை

தினத்தந்தி
|
21 May 2023 11:32 PM IST

10, 11, 12-ம் வகுப்பு ெபாதுத்தேர்வில் கரூர் பி.ஏ.வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது.

கரூர் பி.ஏ. வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி 10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ரதி பிரியா 500-க்கு 483 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி நிதர்சனா, மாணவர் சஞ்சீவி ஆகியோர் 482 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 2-வது இடமும், மாணவிகள் ஹர்ஷிதா ரூபிணி, அஸ்வினி ஆகியோர் 479 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 3-வது இடமும் பெற்றனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் ஜெய்சூர்யா 600-க்கு 573 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி சபிதா 567 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 2-வது இடமும், மாணவி நந்தினி 566 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 3-வது இடமும் பெற்றனர். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் வெற்றிவேல் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி தீபிகா 593 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 2-வது இடமும், மாணவி நிஷா 587 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 3-வது இடமும் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, கேடயமும், பரிசு பொருட்களையும் வழங்கி பள்ளியின் தலைவர் அம்மையப்பன், துணைத்தலைவர் கணேசன், பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

மேலும் செய்திகள்