விழுப்புரம்
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு
|விழுப்புரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்துகிறது. இதற்கு வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். கல்வித்தகுதி, பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. (பிளஸ்-2 குரூப்பின் 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி ஆகியவை ஆகும். மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15,435 ஊதியமாக வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9154251239, 9154251229, 9154250649 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.