< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை
|22 Oct 2023 3:00 AM IST
பழனி பெத்தநாயக்கன்பட்டி பட்டாளம்மன் கோவிலில் 108 சங்கு பூஜை நடைபெற்றது.
பழனி அருகே, பெத்தநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் கடந்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தினமும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி பட்டாளம்மன், மதுரைவீரன், முனியப்பன் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.