< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
மன்னாதி ஈஸ்வரர் சமேத பச்சையம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
|18 July 2022 11:47 PM IST
தேசூர் மன்னதி ஈஸ்வரர் சமேத பச்சையம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் மன்னதி ஈஸ்வரர் சமேத பச்சையம்மன் கோவிலில் 108 சங்காபிேஷகம் நடந்தது.
தேசூர் பேரூராட்சி ஆயிஅம்மன் குளம் அருகே மன்னாதி ஈஸ்வரர் சமேத பச்சையம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. காலையில் மன்னார் சுவாமி, பச்சையம்மன், நவகிரகங்கள், சப்த கன்னிகள், விநாயகர், முருகர், வன தேவதைகள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள மன்னாதி ஈஸ்வரர் பச்சையம்மனுக்கு காவேரி ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை 108 சங்குகளில் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் கோவில் முன்பு பல்வேறு வேண்டுதல்களை வைத்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.