< Back
மாநில செய்திகள்
108 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

108 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
8 March 2023 12:56 AM IST

மாசி மகத்தை முன்னிட்டு 108 பால்குடத்தை பக்தர்கள் எடுத்து கொடுத்தனர்.


சாத்தூர்,

சாத்தூர் மாரியம்மன் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு 108 பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக சக்தி ஹோமம், அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு 108 பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்