விழுப்புரம்
108 ஆம்புலன்ஸ் சேவை
|திண்டிவனத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
திண்டிவனம்,
வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு அவர் திண்டிவனம் மருத்துவமனையில் ரூ.6 கோடியே 87 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனா் சண்முககனி, திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், ரமணன், கண்ணன், தாசில்தார் வசந்த கண்ணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பு மற்றும் ஓங்கூர் பகுதியில் உள்ள பழுதடைந்த மேம்பால சீரமைப்பு பணிகளையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.