< Back
மாநில செய்திகள்
108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது
அரியலூர்
மாநில செய்திகள்

108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது

தினத்தந்தி
|
18 Nov 2022 12:16 AM IST

108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள நடுவலூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மனைவி ரஞ்சனி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 16-ந்தேதி சுத்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதைத்தொடா்ந்து செல்லும் வழியிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் பாக்யலட்சுமி பிரசவம் பார்த்தார். அவருக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர் மஹேந்திரனுக்கும் ரஞ்சனியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பின்னர் தாய், சேய் இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்