< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
திருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
|13 Oct 2023 2:26 AM IST
திருட்டுப்போன 107 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் காணாமல் போன, திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன்கள் மீட்கும் பணி நடைபெற்றது. இதில் 107 விலை உயர்ந்த செல்போன்கள் மீட்கப்பட்டன. நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவற்றை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார். அப்போது, செல்போனை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசக்கூடாது என்றும், சாலையோரம் நடந்து செல்லும் போதும் செல்போனில் பேசிக்கொண்டே செல்லக்கூடாது என்றும் கூறினார். நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.