< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!

தினத்தந்தி
|
21 Dec 2023 5:44 PM IST

மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஸ்விட்ச் யார்ட் பகுதி முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதால் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்