< Back
மாநில செய்திகள்
ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 102 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 102 வாகனங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
8 July 2022 6:30 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில் நாமக்கல் தெற்கு, வடக்கு மற்றும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதி அலுவலகங்கள் சார்பில் கடந்த மாதம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தமாக 4,043 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில், குறைபாடு கண்டறியப்பட்ட 831 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 368 வரியும், ரூ.9 லட்சத்து 45 ஆயிரத்து 300 அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதுதவிர 398 வாகனங்களுக்கு ரூ.23 லட்சத்து 94 ஆயிரத்து 380 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது.

102 வாகனங்கள் பறிமுதல்

இந்த வாகன சோதனையின்போது தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட வாகனம், அனுமதிசீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது என உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட மொத்தம் 102 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்