< Back
மாநில செய்திகள்
திருட்டு போன 101 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சேலம்
மாநில செய்திகள்

திருட்டு போன 101 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
20 Oct 2022 1:15 AM IST

சேலத்தில் திருட்டு போன 101 செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரிமையாளர்களிடம், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாடா ஒப்படைத்தார்.

சேலத்தில் திருட்டு போன 101 செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரிமையாளர்களிடம், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாடா ஒப்படைத்தார்.

101 செல்போன்கள் மீட்பு

சேலம் மாநகரில் பலரது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதன்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் திருட்டு மற்றும் மாயமான செல்போன்கள் எங்கு உள்ளது என்பது குறித்து செல்போன் டவர் மூலமாக விசாரணை நடத்தினர்.

இவ்வாறு கடந்த சில மாதங்களில் திருட்டு, மாயமான 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. சேலம் டவுன் போலீஸ் சரகத்தில் 27 செல்போன்களும், கொண்டலாம்பட்டி சரகத்தில் 60 செல்போன்களும் உள்பட 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

அப்போது, துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, உதவி கமிஷனர்கள் அசோகன், கந்தசாமி, ஆனந்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், சந்திரலேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருட்டு போன செல்போன்களை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு, செல்போனை பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்