< Back
மாநில செய்திகள்
1,001 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

1,001 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
4 Sept 2023 12:12 AM IST

1,001 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.

மேலும் செய்திகள்