< Back
மாநில செய்திகள்
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தினத்தந்தி
|
19 Dec 2022 11:39 AM IST

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்