< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள்
சேலம்
மாநில செய்திகள்

மாநகராட்சி பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள்

தினத்தந்தி
|
25 Oct 2023 1:43 AM IST

ஆயுதபூஜையையொட்டி மாநகர் பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ஆயுதபூஜையையொட்டி மாநகர் பகுதியில் குவிந்த 1,000 டன் குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ஆயுத பூஜை

ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை தினத்தன்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சாமி கும்பிடுவது வழக்கம். இதற்காக ஒரு நாளைக்கு முன்பே மாநகர் பகுதிகளில் வாழை மரங்கள், தேங்காய், பூ, பழம் ஆகியவை விற்பனைக்கு குவித்து வைக்கப்படும். இந்த நிலையில் விற்பனை முடிந்ததும் டன் கணக்கில் குப்பைகள் ஏற்படும்.

இந்தாண்டு நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட மாநகர் பகுதி முழுவதும் பூஜை பொருட்கள் குவிக்கப்பட்டன. இதை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். செவ்வாய்பேட்டை, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட மாநகர் பகுதி முழுவதும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1,000 டன் குப்பைகள்

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ஆயுதபூஜையையொட்டி ஏராளமான குப்பைகள் சேர்ந்தன. இதுவரை வாகனங்கள் மூலம் 1,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு அவை வாகனங்களில் எடுத்து செட்டிச்சாவடியில் உள்ள குப்பை கிடங்கில் போடப்பட்டு உள்ளன. நாளை (இன்று) மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள் முழுவதும் அகற்றப்படும் என்றனர்.

ஒரே நாளில் 1,000 டன் குப்பைகளை அகற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்