மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - வெளியான முக்கிய தகவல்
|உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மாணவியர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - வெளியான முக்கிய தகவல் #womengraduates #womenstudents #tamilnaducollegeshttps://t.co/AU9G3QK1hV
— Thanthi TV (@ThanthiTV) July 29, 2023