< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 1000 வீடுகளில் புகுந்த வெள்ளம்
|7 Aug 2022 7:39 PM IST
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களை அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்
சிதம்பரம்:
சிதம்பரம் கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கறை ஜெய கொண்ட பட்டினம், கீழ திருக்கழிப்பாளை, சின்ன காரமேடு, வீரன் கோயில் திட்டு, ஏருக்கன் காட்டுப் படுகை, உள்ளிட்ட பகுதியில் 1500 க்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் பொதுமக்களை அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாய பயிர்கள் மல்லி, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, சோளம், கத்திரிக்காய் உள்ளிட்ட பயிறு வகைகள் வெள்ள நீரில் மூழ்கியது.