< Back
மாநில செய்திகள்
கோமாரி நோய் தாக்கி மரணத்தின் பிடியில் இருக்கும் 1,000 கால்நடைகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கோமாரி நோய் தாக்கி மரணத்தின் பிடியில் இருக்கும் 1,000 கால்நடைகள்

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோமாரி நோய் தாக்கி மரணத்தின் பிடியில் இருக்கும் 1,000 கால்நடைகள் மருத்துவ முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளன. ஆடுகளுக்கு வாய் கோமாறி அம்மை நோய், காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவி ஆயிரக்கணக்கான கால்நடைகள் சாகும் நிலையில் உள்ளது. நோய் தாக்கி 10 நாட்களுக்கு மேலாகியும் கால்நடை மருத்துவர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என கால்நடை வளர்ப்போர் புகார்தொிவிக்கின்றனர்.

கால்நடைகளை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் வயோதிகர்களாக இருப்பதால் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரிய செவலை, டி.கொலத்தூர், டி.புதுப்பாளையம், துலங்கம்பட்டு, துலுக்கப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் சாகும் நிலையில் உள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்