< Back
மாநில செய்திகள்

பெரம்பலூர்
மாநில செய்திகள்
100 வயது கடந்த வாக்காளர் கவுரவிப்பு

4 Oct 2023 12:26 AM IST
100 வயது கடந்த வாக்காளர் கவுரவிக்கப்பட்டார்.
பெரம்பலூரில் உலக முதியோர் தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதைெயாட்டி பெரம்பலூரில் அதிக வயதான வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரசேகரன், பெரம்பலூர் உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், தாசில்தாருமான கிருஷ்ணகுமார் ஆகியோர் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 101 வயதுடைய வாக்காளரான பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த அங்கப்பனின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 95 வயதுடைய பெண் வாக்காளரை குன்னம் துணை தாசில்தார் அவரது இல்லத்தில் சந்தித்து கவுரவித்தார்.