திருப்பத்தூர்
10, 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
|பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10, 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2022-23-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் தென்றலரசி என்ற மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே போல் ரித்திகாஸ்ரீ இரண்டாம் இடத்தையும், பரமேஸ்வரி மூன்றாமிடத்தையும், பிரேம்குமார் 4-வது இடத்தையும், ஷோபிகாஸ்ரீ ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி. பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, பள்ளி தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 22 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.