< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு
|2 Nov 2023 12:30 PM IST
புதிய கட்டணம் வரும் 10-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த புதிய கட்டணம் வரும் 10-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.