கடலூர்
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம்
|ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம் போலீசார் அதிரடி நடவடிக்கை
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக கடலூர் உட்கோட்டத்தில் 23 பேருக்கும், சிதம்பரத்தில் 19 பேருக்கும், நெய்வேலியில் 48 பேருக்கும், சேத்தியாத்தோப்பில் 9 பேருக்கும், பண்ருட்டி உட்கோட்டத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிய 13 பேருக்கும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேருக்கும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்ததால் 23 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 13 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறிய மொத்தம் 216 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட அபராத தொகை கடலூர் மாவட்டத்தில் இன்னும் அமல்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே அபராத தொகை வசூலிக்கப்பட்டது.