< Back
மாநில செய்திகள்
100 நாள் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
வேலூர்
மாநில செய்திகள்

100 நாள் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
12 Aug 2023 10:25 PM IST

கே.வி.குப்பம் அருகே 100 நாள் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த செம்மண்குட்டை கிராமத்தில் இன்று 100 நாள் வேலைப் பணியாளர்களை கொண்டு சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அவர்கள் சாலை ஓரங்களில் இருந்த செடிகளைப் பிடுங்கிக் கொண்டு வந்து அவற்றை நட்டு, மண்ணைக் கொண்டு மூடியபடி சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள், "மரக்கன்றுகள் நட குழி எடுக்கவில்லை, முறையாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் இல்லை. எதற்காக இந்த அரைகுறை வேலை?" என்றும், 100 நாள் பணியாளர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

இதைவிட அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்தி இருக்கலாம். குழிகள் முறையாக எடுக்கப்படவில்லை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லை. அரசு வழங்கிய மரக்கன்றுகள் எங்கே? என்று தட்டிக்கேட்டனர்.

இதனால் 100 நாள் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, "தமிழக முதல்-அமைச்சர் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டுள்ளார். அரசு தரப்பில் இதுவரை மரக்கன்றுகள் வழங்கப்படவில்லை.

மரக்கன்று நடவேண்டும் என்பதற்காக கிடைத்த மரக்கன்றுகள் நடப்பட்டன" என்றார்.

மேலும் பணியாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் மரக்கன்று நடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்