< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
100 நாள் வேலையை முழுமையாக வழங்க வலியுறுத்தல்
|26 July 2022 2:04 AM IST
100 நாள் வேலையை முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர். அதில், தங்கள் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் தான் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை தரப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு அந்த திட்டத்தில் உள்ள நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.