< Back
மாநில செய்திகள்
100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
6 July 2022 6:58 PM GMT

100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தா.பழூர்:

முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) ஒருங்கிணைப்பாளர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் வரவேற்று பேசினார். இதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, அந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்தும், பணி நடைபெறும்போது களப்பணியில் ஈடுபடுவது குறித்தும், ஆவணங்களை பராமரித்தல் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விக்னேஷ், ஒன்றிய பொறியாளர் சரோஜினி, பணி மேற்பார்வையாளர் ராஜவேலு ஆகியோர் பயிற்சி அளித்தனர். பணி மேற்பார்வையாளர் நிர்மல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்