< Back
மாநில செய்திகள்
சிவகங்கை பகுதியில் சூறைக்காற்று- 100 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்ந்தன
சிவகங்கை
மாநில செய்திகள்

சிவகங்கை பகுதியில் சூறைக்காற்று- 100 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்ந்தன

தினத்தந்தி
|
21 Sep 2023 7:00 PM GMT

சிவகங்கை பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை பகுதியில் வீசிய சூறைக்காற்றால் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூறைக்காற்று

சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி, உள்ளிட்ட 7 கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பப்பாளி பயிருட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய் மற்றும் பழங்கள் அருகில் உள்ள மதுரை பழக்கடை மார்க்கெட்டிற்கும், மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் தினசரி அனுப்பி வருகின்றனர்.

மேலும் நாள் ஒன்றுக்கு இந்த பகுதியில் இருந்து 50 டன் அளவிற்கு அனுப்பட்டுவருகிறது. இந்நிலயைில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

விவசாயிகள் கவலை

இதன் காரணமாக இப்பகுதியில் பயிரிடப்பட்ட பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூறைக்காற்றால் பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் சேதமான மரங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்