< Back
மாநில செய்திகள்
ரெயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை  : ரெயில்வே போலீஸ் அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

ரெயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை : ரெயில்வே போலீஸ் அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
23 Sep 2022 10:00 AM GMT

ரெயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே போலீஸ் தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் ஓடும் ரெயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது.

மின்சார ரெயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்தனர். சென்னை - திருத்தணி மின்சார ரெயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாணவனை நேற்று போலீஸ் கைது செய்தது. கத்தி வைத்திருந்து போலீசை கண்டதும் தப்பி ஓடிய மாணவன் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பட்டாகத்தியுடன் ரெயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய ரெயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே காவல்துறை எச்சரித்திருக்கிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், விஷம செயல்களில் ஈடுபட கூடாது என ரெயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளது

மேலும் செய்திகள்