< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
|29 Oct 2022 12:56 PM IST
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
காஞ்சிபுரம், அங்காளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 25). கூலித்தொழிலாளி. கடந்த 2014 -ம் ஆண்டு பால் வாங்க கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை வழி மறித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். முன்னதாக முஜிபூர் ரஹ்மானை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 10 ஆண்டு
சிறைத்தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.