< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
|15 Sept 2023 10:08 AM IST
இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை வடபழனி காமாட்சி அம்மன் காலனி முதலாவது தெருவில் வசித்து வந்தவர் சதீஷ் (வயது 32). இவரது மனைவி கனகவள்ளி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு குடும்பம் நடத்த பணம் கொடுக்காமல் கனகவள்ளியை, சதீஷ் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த கனகவள்ளி 12.12.2015 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.