விருதுநகர்
ரூ.10 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|சிவகாசியில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலர் மாநகராட்சி கமிஷனர் சங்கரனிடம் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் சுகாதார பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் வினியோகம் செய்யும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சுகாதார அதிகாரிகள் சித்திக், பாண்டியராஜ் மற்றும் சிலர் சிவகாசி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
பிளாஸ்டிக் பை பறிமுதல்
அப்போது சரக்கு வாகனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கேரி பைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து சரக்கு வாகனத்துடன் அந்த கேரி பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட கேரி பைகளை கொண்டுவந்த வேலாயுதம் ரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். துரித நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்த சுகாதார பிரிவு அதிகாரிகளை கமிஷனர் சங்கரன் பாராட்டினார்.