தஞ்சாவூர்
10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
|ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி 2 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சேதுபாவாசத்திரம்:
4,500 நாட்டுப்படகுகள்
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப் படகுகளும், மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப் படகுகளும் உள்ளன.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களிலும், பிற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.