விருதுநகர்
10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
|விருதுநகர் மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு
தேசிய அளவில் தக்காளி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டதால் தக்காளியின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்தநிலையில் மத்திய அரசு தக்காளி சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது .
தமிழகத்தை பொறுத்தமட்டில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
தக்காளி கிலோ ரூ.60
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய4 தாலுகாவில் உள்ள 10 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, அரசின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள 10 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக வெளிச்சந்தையில் இருந்து கிலோ ரூ. 105-க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுகளை கொண்டு செல்ல வேண்டியதில்லை.
ஆனால் 1 நபருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படும். தொடர்ந்து பிற தாலுகாகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.