கடலூர்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
|ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி
குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை இலங்கை முகாமில் வசித்து வருபவர் அரிகரதாஸ் மனைவி கலைவாணி (வயது 51). இவர் சென்னையில் வசித்து வரும் தனது 2 மகள்களை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்த அரசு பஸ்சில் வடலூர் வந்தார். இதையடுத்து முகாமுக்கு செல்வதற்காக அங்கிருந்து தனியார் பஸ்சில் குள்ளஞ்சாவடிக்கு சென்றார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கி தனது கைப் பையை கலைவாணி பார்த்தபோது அதில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. வடலூரில் இருந்து குள்ளஞ்சாவடிக்கு சென்றபோது பஸ்சில் இருந்த கூட்டநெரிலை பயன்படுத்தி மர்மநபர்கள் கலைவாணியின் கைபையில் வைத்திருந்த நகையை திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.